• seed1

    seed

  • seed 2

    seed

  • seed 3

    seed

வானகம் விதைகள்

விதை என்றால் என்ன ?

“விதை” என்பது உறக்கத்தில் உள்ள செடி. விதையை நிலத்தில் இட்டு நீர் விடும் வரை அது உறக்கத்தில் உள்ளது. விதையை அதற்கே உரிய பருவத்தில் விதைத்து நீர் விட்டால்தான் அது முழுமையான வளர்ச்சி அடைந்து உரிய விளைச்சலைத் தருகிறது. “விதை” என்பது தனது பெற்றோர்களின் தோற்றத்தையும் பண்புகளையும் உள்ளடக்கி உள்ளது. ஒரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்போது உழவர் அதைப் பார்த்து விதை” எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கிறார்கள்.

ஏன் வேண்டும் விதை சேமிப்பு?

தகவமைத்தல்: நாட்டு பாரம்பரிய மரபு விதைகள் எந்த சூழலுக்கும் ஏற்றவாறு தகவமைத்து கொள்ளும் தன்மைகொண்டது. நாட்டு விதைகள் என்று நாம் குறிப்பிடுவது அந்தந்த பகுதி சார்ந்தது, வெள்ளூர் முள்ளு கத்திரி அந்த பகுதியில் செம்மையாக வளரும், விளையும். அதே விதை மற்ற பல பகுதியிலும் விளையும் சுவையும், விளைச்சலும் சற்று மாறுபடும். மேலும் மரபு விதைகள் கடும் வறட்சி மற்றும் வெள்ளத்தையும், தாங்கி வளரக்கூடியது, நல்ல விளைச்சலை தரக்கூடியது, அதிக வீரியம் கொண்டவையாகவும் இயல்பிலே பூச்சுதக்குதலை எதிர்கொள்ளும் தன்மையுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாவும் உள்ளவை. அதிக நீர் பாய்ச்சாமல் குறைவான நீரிலே வளரும் தன்மை கொண்டது.

Recent Post