Mission

நம் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட மரபு விதைகளை மீட்டெடுத்தல், உழவர்களின் கைகளில் இருக்கும் மரபு விதைகளை பாதுகாத்தல் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நாங்கள் பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளோம்.

  • மரபு விதைகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
  • மரபு விதைகள் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல் களஞ்சியம் உருவாக்குதல்.
  • மரபு விதைகளின் சிறப்புகள், அவற்றின் தனித்தன்மையை உலகறிய செய்தல்.
  • மரபு விதைகள் பரவலை ஊக்குவித்தல்.
  • உழவர்கள் தங்களுக்குள் மரபு விதைகளை பகிர்ந்து கொள்ள உதவி புரிதல்.