Home / Blog / தினை


தினை

Mar 26, 2018 12:45:25 PM
விதையின் பெயர் தினை
பயிர் வகைகள் சிறுதானியம்
விதைப்பு பருவம் ஆடி, ஆவணி பட்டம்
அறுவடை காலம் 90

விதையின் சிறப்பு
தினை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள மணல்பாங்கான மண்வகை ஏற்றது.
இதன் சாகுபடி காலம் 3 மாதங்கள். ஆடி, ஆவணி ஆகிய பட்டங்கள் ஏற்றவை.
தினையைப் பூச்சி, நோய் தாக்காது.
எழுபதாம் நாளில் கதிர் பிடித்து, 90-ம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.
சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு ‘ஏனல்’ என்று பெயர்.  கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும். மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர். அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியவை தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவது வழக்கமாகும்.