Home / Blog / சாமை


சாமை

Mar 26, 2018 12:54:03 PM
விதையின் பெயர் சாமை
பயிர் வகைகள் சிறுதானியம்
விதைப்பு பருவம் ஆடி , ஆவணி பட்டம்
அறுவடை காலம் 110 நாள்

விதையின் சிறப்பு
  1. வானாவரி விவசாயிகள் பொதுவாக சீர்மிகு தானியங்களான சாமையை விதைப்பது வழக்கம்.
  2. ஐந்து கிலோ விதை சாமை கொண்டு பொதுவாக 1 ஏக்கருக்கு விதைக்கலாம்.
  3. 80-ம் நாளில் கதிர் பிடித்து, 100 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.
  4. சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.
  5. சாமைப் பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை.
  6. சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.