Home / Blog / சோளம்


சோளம்

Mar 26, 2018 01:10:45 PM
விதையின் பெயர் சோளம்
பயிர் வகைகள் சிறுதானியம்
விதைப்பு பருவம்
அறுவடை காலம் 6 மாதம்

விதையின் சிறப்பு
  1. சோளம் அனைத்து பகுதிகளிலும் விளைய ஏற்ற பயிராகும். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவினுடைய இயற்கைச் சோளமாகும்
  2. மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும்.
  3. ஆடி மாதத்தில், ஒரு மழை பெய்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்யவது வழக்கம் .எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
  4. சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும்.
  5. நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம்.
  6. நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.