Home / Blog / செஞ்சோளம் / இறுங்கு சோளம்


செஞ்சோளம் / இறுங்கு சோளம்

Mar 26, 2018 01:29:45 PM
விதையின் பெயர் செஞ்சோளம் / இறுங்கு சோளம்
பயிர் வகைகள் சிறுதானியம்
விதைப்பு பருவம் ஆடி, ஆவணி பட்டம்
அறுவடை காலம் 6 மாதம்

விதையின் சிறப்பு
  1. பெரும்பாலும் வானாவரிக்கு ஏற்ற பயிர்.
  2. தானியங்களுக்காகவும், கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகிறது.
  3. மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும்.
  4. ஆடி மாதத்தில், ஒரு மழை பெய்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்யவது வழக்கம் .எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
  5. சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும்.
  6. நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம்.
  7. நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். 
  8. சோளம் அரிசி சோறு கொங்கு வட்டார விவசாயிகளின் பிடித்த உணவு.
  9. இட்லி,தோசை , பணியாரம் செய்யதால் சுவையாக இருக்கும்.