Vision

இன்று உழவர்களின் தற்கொலைகளுக்கும், நட்டத்திற்கும், கடன்படுதலுக்கும் இரசாயன வேளாண்மை காரணமாக உள்ளது. இரசாயன வேளாண்மையின் முக்கிய கூறான ஹைப்ரிட் விதைகள் கொண்டுவரப்பட்ட பின்னர் விவசாயிகளின் கைகளில் இருந்த மரபு விதைகள் நிறுவனங்களின் கைகளுக்கு மாறின. உழவர்கள் வேளாண்மை செய்வதற்கு நிறுவனங்களின் விதைகளை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால் விதைகளுக்கென உழவர்கள் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய மோசமான சூழலை மாற்றியமைப்பதற்காக இந்த இணையதளம் கீழுள்ள நோக்கங்களுடன் இயங்குகிறது.

  • உழவர்களை கடனில் இருந்தும், பொருளாதார சுமையில் இருந்தும் மீட்பதற்காக பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல்.
  • பாரம்பரிய விதைகளை பகிர்தல்.