மறு விதைப்புக்கு விதைகளை பூச்சி, பூஞ்சான் , எறும்பு, வண்டு போன்றவைகளிடம் இருந்து பாதுகாத்து , சேமித்து வைக்கும் உத்திகள் மிகவும் எளிமையானதாக, அதிகம் செலவு இல்லாத வகையிலும் இருந்தது.
விளைகின்ற பயிரில் நன்கு விளைந்த பயிரில் இருந்து தேறிய விதைகளை மட்டுமே எடுத்தார்கள். உலர்த்தி கோட்டை கட்டி (வைக்கோலால்) பெட்டி போல செய்து ஆக்கையால் கட்டி சாணம் மொழுகி பரணிலே வைத்து பாதுகாத்தார்கள் அல்லது பானைகள் அல்லது மண் குதிர்களில் கொட்டிப் பாதுகாத்தார்கள்.
“விதை சேமிப்பின் போது விதைகளை பூச்சி தின்றுவிடாமல் இருப்பதற்கு நொச்சி , புங்கன் போன்ற தாவரங்களின் இலைகளை “விதை” மீது பரப்பி பாதுகாத்தார்கள். “விதை” சேமிப்பிற்கு முன்பு மூன்று “புது நிலவு” (அமாவாசை) நாட்களில் வெயிலில் உலர்த்தி அதன் பிறகே சேமித்தர்கள். விதைகளை உழவர்கள் கைமாற்றிக் கொண்டார்கள். விதைகளை விற்பதும் வாங்குவதும் பண்டைய தமிழர்களிடையே நடந்ததாக தெரியவில்லை.