விதை நேர்த்தி

அடிப்படைகள்

சிவகாமி · 23/10/2018

விதைகள் நன்கு முளைத்து வளர்வதையும், முளைத்து வளரக்கூடிய பயிர் எப்படி விளையப் போகிறது என்பதையும் முளைக்கின்ற விதை தீர்மானிக்கின்றது. ஆதலால், விதையை விதைப்பதற்கு முன்பு நாம் நேர்த்தி செய்ய வேண்டி உள்ளது.

விதை நேர்த்திக்கான சில வழிமுறைகள்

1. விதையை விதைப்பதற்கு முன்போ விதைத்தற்குப் பின்போ தூவி விதைப்பது நீண்டகாலமாக வழக்கில் உள்ளது. சாம்பலில் விதைகளைப் புரட்டுவது எறும்பு, எலி, குருவி போன்றவை பொறுக்கி விடாமல் இருப்பதற்கு உதவுகிறது.

2. பசு மூத்திரத்தில் விதைகளை 24 மணிநேரம் ஊறவைத்து விதிப்பதால் முளைத்து வளரும் செடிகள் ஆரோக்கியமாக வளருகின்றன. 1 பங்கு பசு முத்ராதிற்கு 10 பங்கு தண்ணீர் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும்.

3. நான்கு மணி நேரம் ஆவூட்டத்தில் (பஞ்சகவ்யா) அல்லது ஆட்டூட்டதில் ஊற வைத்து விதைப்பதால் செடிகள் வீரியமாக வளர்வது கண்டறியப்பட்டுள்ளது. 3௦௦ மி.லி பஞ்சகவ்யாவிற்கு 1௦ லிட்டர் தண்ணீர் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும். நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.

நெல், தக்காளி, கத்திரி நாற்றுகள் மற்றும் பிற நாற்றுகளை இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் மிக நன்றாக வளரும். அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும். பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும், பூச்சிகள், நோய் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மையை பெரும்.

4. சாண எரிக்காற்று கலனில் இருந்து வெளிவரும் சாணக் குழம்பில் சாக்கினுள் போட்டு கட்டிய விதைகளைப் புதைத்து வைத்திருந்து ஒருநாள் கழித்து விதைப்பதால் செடிகள் வீரியமாக வளர்வதைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

5. மழைநீரில் ஒரு இரவு விதைகளை ஊறவைத்து மறுநாள் விதைத்தல் செடிகள் வீரியமாக வளர்வதைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.