விதை என்றால் என்ன

அடிப்படைகள்

சிவகாமி · 23/10/2018

“விதை” என்பது உறக்கத்தில் உள்ள செடி. விதையை நிலத்தில் இட்டு நீர் விடும் வரை அது உறக்கத்தில் உள்ளது. விதையை அதற்கே உரிய பருவத்தில் விதைத்து நீர் விட்டால்தான் அது முழுமையான வளர்ச்சி அடைந்து உரிய விளைச்சலைத் தருகிறது. “விதை” என்பது தனது பெற்றோர்களின் தோற்றத்தையும் பண்புகளையும் உள்ளடக்கி உள்ளது. ஒரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்போது உழவர் அதைப் பார்த்து விதை” எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கிறார்கள்.